தோழர் ஜெகன் 12 வது நினைவுதினம் 7/6/2018

மனித நேயத்தின் அடையாளம் தோழர் ஜெகன்.நியாயம் கோரி போராடும்போது அக்னிக்குஞ்சு.

காந்தியம்,மார்க்சியம்,
அம்பேத்காரியம்,பெரியாரியம்,
இதுவே இவரின் அடையாளம்.

 1. ஒடுக்கப்பட்ட ஊழியரின் உரிமைக்குரல் ,
  அதிகார அத்துமீறல்களுக்கு சிம்மசொப்பனம்,
  இளையத்தோழர்களின் ஈர்ப்புமையம்,
  எதிர்கருத்துக்கு மதிப்பளிக்கும் ஈடுஇணை இல்லா ஜனநாயகம்,
  தலைமை பண்பிற்கோர் எடுத்துக்காட்டு,
  தடை பல கடந்து இயக்கம் கட்டிய தலைமகன் ,
  தன்நலம் கருதா பெருமகன்,
  எம் இதயங்களில் மட்டுமல்ல
  இல்லங்களில் வாழும் ஜீவனவர்,
  எம் வாழ்க்கை ஏற்றம் பெற ,
  இருள்நீங்கிவெளிச்சம்பெற,
  உழன்ற ஆதவன் ,
  ஒளிர்ந்த கதிரவன்,
  நினைவை போற்றுவோம்.
  மாவட்டங்களில் நிகழ்ச்சிகளை நடத்திடுவோம்.