தோழர் ஜெகன் பிறந்த தினம் 17/05/2018 இளைஞர் தினம்

  • தோழர் ஜெகன்அவர்களின் 87 வது பிறந்த தின விழா கிரீம்ஸ் ரோடு, NFTE அலுவலகத்தில்      17/5/2018 மாலை 3.30 மணிக்கு மாநிலத்தலைவர் தோழர் காமராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநிலச்செயலர் தோழர் நடராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்.               கூட்டத்தில் AIBSNLEA மாநிலசெயலர் தோழர் துரையரசன் ,கலியபெருமாள், AIBSNLOA மாநிலசங்க நிர்வாகி பத்ரிநாத் ,சிவில் மாவட்ட செயலர் குமாரதாஸ்,STR மாநிலசெயலர் அன்பழகன் ,மோகன்குமார் ,சுந்தர்பாபு ,E3 முன்னாள் மாநில பொருளர் சிவசங்கரன் ,தோழர் NK, FNTO பார்த்திபன் , CGM (O ) மாவட்ட செயலர் மனோஜ் ,ஸ்ரீராம் ,சரவணன்,சார்லஸ் ,மௌலி STR மற்றும் CGM அலுவலக தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் .

  • தோழர் RK அவர்களின் அனுபவ உரை மிக சிறப்பாக அமைத்தது .தோழர் ஜெகன் அவர்களின் ஆளுமை ,தலைமை பண்பு ,சகிப்பு தன்மை ,பொறுமை, போராட்ட குணம் ,கடைகோடி தோழரின் உணர்வுக்கும் மதிப்பளிக்கும் உயர்ந்த குணம் கொண்டவர் . அவர் அறிந்திராத விஷயமேயில்லை விவசாயிகளின்பிரச்சனை,பாட்டாளிகளின் பிரச்சனை என எந்த பிரச்சனை என்றாலும் மிக ,மிக ஆழமாக கற்றவர் தோழர் ஜெகன் .பெண்களை மதிப்பதில் அவருக்கு நிகர் அவரே .பிறருக்கு உதவுவதில், பிறர் துயர் துடைப்பதில் என சகல நற்குணங்களும் ஒருங்கே இணையப்பெற்றவர். ,மஸ்தூர் வாழ்வில் விடியல் தந்த தஞ்சை போராட்டம் -வெற்றி என தோழர் ஜெகனின் பன்முக திறமையை /தன்மையை விளக்கி பேசினார் தோழர் RK .
  • இறுதியாக தோழர் G .S .முரளிதரன் மாநிலதுணை செயலர் நன்றி கூறி முடித்து வைத்தார் …