தமிழ் மாநில செயற்குழு, கரூர்-14/052018

தமிழ் மாநில செயற்குழு, கரூர்14/052018

தமிழ் மாநில செயற்குழு கூட்டம் 14/05/2018 அன்று மாநிலத்தலைவர் தோழர் ப.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. , கோஷங்கள் முழக்கத்தில் முன்னாள் மாநில சங்க நிர்வாகி தோழர் சுந்தரம் தேசியக்கொடியை உயர்த்திட,சம்மேளன பொதுச்செயலர் தோழர் சந்தேஸ்வர் சிங் சம்மேளனக்கொடியை உயர்த்தினர்.

கரூர் ஆறுமுகம் மாநில உதவிதலைவர், திருச்சி மாவட்டம் சார்பாகவும், தோழர் ஜி.எஸ். முரளிதரன் மாநில சங்கம் சார்பாகவும், வரவேற்புரை நிகழ்த்தினர்.

தோழர் லோகநாதன் அஞ்சலிஉரைக்கு பின்னர், மாநில செயலர் செயற்குழு ஆய்படு பொருள் மற்றும் நோக்க உரை நிகழ்த்தினார்.மாநிலத்தலைவர் தலைமை உரை ஆற்றினர்

தோழர் பட்டாபியின் தகவல்கள் நிறைந்த, கருத்தாழமிக்க துவக்கவுரையில் மூலமாக தற்போதைய டவர் நிறுவன அமைப்பு, ஊதிய மாற்றம், புதிய தொலைத்தொடர்பு கொள்கை குறித்தி விளக்கிணார்.

பொதுசெயலர் தோழர் சி.சிங் அனைத்து பிரச்சனைகளின் இன்றைய நிலை, தேர்வு முடிவுகளில்  மாற்றம், போனஸ் குறித்து விளக்கினார்.

பின்னர் தோழர் பழனியப்பன் மாவட்ட செயலர் திருச்சி விவாத்தை துவக்கி பேசிட மாவட்ட செயலர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

முன்னால் சம்மேளன செயலர்கள் தோழர்கள் கோபால கிருஷ்ணன், ஜெயராமன் ஆகியோரை தோழர்கள் ஜெயபால்,சேது, சுப்பராயன் , முரளிதரன் , சி.சிங் பாராட்டி உரையாற்றினர். மேலும் புதிய நிர்வாகிகள் பழனியப்பன், காமராஜ், செம்மல் அமுதம் மோஹன்குமார் ஆகியாரும் பாரட்டப்பட்டனர்.

தோழர்கள் செல்வம் பொதுசெயலர், அன்பழகன் வாழ்த்துரை வழங்கினர்கள்.

மாநிலசெயலர் தொகுத்து பதில் உரை அளிக்க, தோழர் முருகேசன் மாநில உதவிசெயலர் நன்றிஉரை நிகழ்த்தினார்.

பொதுசெயலர் , பட்டாபி உரை தனியே பின்னர்.