வருடாந்திர இலக்கு பாராட்டு நிகழ்ச்சி

மாநில நிர்வாகம் 11/04/2018 அன்று 2017-18 க்கான வருடாந்திர இலக்கு ,வருவாய்1700 கோடிக்கு மேல் 28 லட்சம் செல் இணைப்புகள்,மார்ச் மட்டும் 110256 செல் இனைப்புகள் லேண்ட்லைன் இணைப்புகள்,EB இலக்கு விஞ்சியது, பயிற்சி கேந்திரம்மூன்றாவது ஆண்டாக சாதனை,,வேலூர் LL/BB சாதனை, ஒரு நாளில் 1,17,000 செல் இணைப்புகள் ஆக்டிவேஷன் என பல்வேறு முதலிடம் பெற்ற செயல்பாடுகளை,அனைவரது முனைப்பை வெகுவாக மாநில நிர்வாகம் பாரட்டியது
சங்கங்கள் பணி, ஒத்துழைப்புக்கு நன்றி பாராட்டப்பட்டது நமது சங்கம் தத்து எடுத்த வேலூர் மாவட்டம் மார்ச் மாத இணைப்பில் 4641 வழங்கி அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றது. அதற்காக தோழர் அல்லிராஜா மாவட்டசெயலர் உழைப்பை தலைமை பொது மேலாளர் குறிப்பிட்டு, வேலூர் மாவட்ட மேலாளரை தோழர் அல்லி முயற்சியை எடுத்து கூற செய்தார்.
மாநில சங்கத்திற்க்கு பெருமை சேர்த்த்த அல்லி மற்றும் வேலூர் மாவட்ட தோழர்கள் , உறுதுணையாக நின்ற, தோழர்கள் , அதிகாரிகள் அனைவரையும் மாநில சங்கம் நெஞ்சார பாராட்டுகிறது.