உணர்வுபூர்வமான போராட்டம்

உணர்வுபூர்வமான போராட்டம்

ஓராண்டு காலமாக நமது சம்பள மாற்றம் மற்றும் தனி டவர் கார்ப்பரேஷன் உருவாக்கம் கூடாது என்பதை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளோம் .தொடர்ந்து நமது அகில இந்திய சங்கங்களின்   அறைகூவலை ஏற்று சத்தியாகிரகம் ஜனவரி 30 முதல் பிப் 3 வரை மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது . காந்திஜியின் நினைவு தினமான டிசம்பர் 30 ல் சாத்தியகிரகா தொடங்கப்பட்டது. பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அறவழியில் போராட்டம் நடத்திய அண்ணல் காந்தி வழியில் நடத்தப்பட்டது . BSNL  துறையை காத்திட ஊழியர் மற்றும்  அதிகாரிகள் நலன் காத்திடநடத்தப்பட்ட தர்மம் யுத்தம் 5 நாள் சாத்தியகிரகா மிகவும் சிறப்பாக தமிழகம் ,முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் எழுச்சியோடு நடைபெற்றுள்ளது .சென்னை CGM அலுவலகத்தில் 30/01/2018 அன்று முதல் நாள் தோழர்  துரையரசன் AIBSNLEA மாநில செயலர் தலைமையில் நடைபெற்றது .அதில்  BSNLEU அகில இந்திய பொதுசெயலர்  தோழர் அபிமன்யு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.மாலை 3 .00 மணிக்கு காந்தி மண்டபத்தில் மகாத்மா சிலைக்கு  SNEA மாநிலத்தலைவர் தோழர் பாலசுப்ரமணியன் மாலை அணிவிக்க சிரதாஞ்சலியில் தலைவர்கள் முரளி NFTE   ,காமராஜ் NFTE ,நடராஜன்NFTE ,  BSNLEUஅகில இந்திய துணை  பொதுசெயலர் தோழர்  செல்லப்பா,

தோழர்  பாபுராதாகிருஷ்ணன்  BSNLEU மாநிலசெயலர் , தோழர்  பெருமாள் சேவா அகில இந்திய தலைவர்  தோழர் பலராமன் சேவா மாநிலசெயலர் , ,  தோழர்கள்   கிருஷ்ணன் மாநில செயலர்  TEPU  ,கலிய பெருமாள் AIBSNEA , மோகன் AIBSNEA,ராஜசேகர்  மாநில செயலர்  SNEA , மற்றும் மற்றும் தோழர்கள் மனோஜ் மாவட்டசெயலர் ,வளனரசு SNEA ,STR மாநிலசெயலர் அன்பழகன் ,தோழர் ஸ்ரீதர் TEPU ,இராமலிங்கம் BSNLEU  சிவில் குமாரதாஸ் மற்றும் தோழர்கள்  பெரும்  திரளாக கலந்து கொண்டனர் .2 ஆம்  நாள் தோழர் காமராஜ் தலைமையிலும் ,3 ஆம் நாள் தோழர் ராஜசேகர் தலைமையிலும்,4 ஆம் நாள் தோழர் பாபுராதாகிருஷ்ணன் தலைமையிலும் ,5 ஆம் நாள் தோழர் பலராமன் தலைமையிலும் சத்தியகிரகா கூட்டம் நடை பெற்றது .

இந்த 5 நாள் போராட்டத்தில் நாகர்கோயில் ,குன்னூர் ,கோவை ,ஈரோடு,சேலம், தர்மபுரி,வேலூர் ,பாண்டி,கடலூர் ,கும்பகோணம் ,தஞ்சாவூர் ,திருச்சி ,காரைக்குடி  ,மதுரை,விருதுநகர் ,தூத்துக்குடி,திருநெல்வேலி ,சிவில் ,CGM  அனைத்து பகுதியிலும் மத்திய சங்க ,தோழமை சங்க தலைவர்களை அழைத்து சிறப்பாக கூட்டம் நடத்திய மாவட்ட செயலர்களுக்கு நெஞ்சு நிறை நன்றிகள்.

சென்னையில் மத்திய தொழிற்சங்கதலைவர்கள் LPF ஷண்முகம் AITUC மூர்த்தி ,CITU சுகுமார் ,INTUC சேவியர் ,HMS ராஜஸ்ரீதர் , மற்றும் நடராஜன், TEPU சுப்புராமன் ஆகியோர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

நமது இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் ஆர்.கே ,தோழர் பட்டாபி  ,ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் தோழர்கள்  முத்தியாலு ,நரசிம்மன் வாழ்த்தினர்.  ஐந்தாம் நாள் தோழர் சிவகுமார் AIBSNLEA அகில இந்திய தலைவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்

போராட்டம் வெற்றிகரமாக ந்டைபெற்றது. ஊழியர்கள் மட்டத்தில்  விரைவில்  தீர்வு பெற்று தரவேண்டும் என்ற விழைவு மேல் ஓங்கி உள்ளது என்பதை கணக்கில் கொண்டு. மத்திய சங்கங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை திட்டமிடவேண்டும்.