ஒற்றுமையின் வெற்றி

ஒற்றுமையின் வெற்றி

காண்டிராக்ட் ஊழியர்களின் ஊதியம் 2 மாதங்களாக வழங்கபடாமல்     இருந்ததை கண்டித்து NFTE-BSNL, TMTCLU  சங்கங்கள் 3ம் தேதியில் ஒரு நாள் உண்ணவிரத போராட்டத்தை திட்டமிட்டது BSNLEU TNECWU  2ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியநிலையில் NFTE BSNL, TMTCLU, STR  சங்கங்கள் இணைந்து நடத்திட திட்டமிடபட்டு ஒன்றுபட்ட போராட்டம் நடைபெற்றது, தீர்வு காலதாமதமானதால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது..மாநில நிர்வாகம் சாதகமான நிலை எடுத்த போழுதும் நிதி குறித்த உறுதியான தகவல் இல்லாதால் போரட்டம் 4  ம் தேதி தொடர்ந்தது.மத்திய சங்கங்கள் தலையிட்டு நிதி பெற ஏற்பாடு செய்தன. பின்னர் நிதி வழங்கப்படும் செய்தியை  தலைமை பொது மேலாளார்/மத்திய சங்கம் தெரிவித்த அடிப்படையில் போராட்டம் முடிவுக்கு வந்தது.போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கும், இரு நாளும் வந்து வழிகாட்டிய தோழர்கள் ஆர்.கே,. பட்டாபி அவர்களுக்கும்  NFTE BSNL, TMTCLU  STR மாநில சங்கங்கள் நன்றியை உரித்தாக்குகின்றது.